தமிழக மக்களை மொழி, சாதி என திமுகவினர் பிரித்து ஆள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, எனது அன்பார்ந்த சகோர சகோதரிகளை என தனது உரையை தமிழில் பிரதமர் மோடி தொடங்கினார். தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். 2024 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கட்டும். ஜலகண்டேஸ்வரர், முருகப்பெருமானை வணங்கி உரையை தொடங்குகிறேன்.
ஆங்கியேர்களுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டது வேலூர். அந்த நகர மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராகிவிட்டனர். வேலூர் மண் மீண்டும் ஒரு புரட்சி படைக்கப்போகிறது. இந்த கூட்டத்தை டெல்லி ஆச்சரியமுடன் பார்க்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாடு என்ன நிலையில் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரசின் கடந்த கால ஆட்சியில் மோசடி,ஊழல் என்று தான் செய்தி வரும் .
வளமான இந்தியாவுக்கு பாஜக அடித்தளமிட்டுள்ளது. விண்வெளி துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் திறமை வளர்ந்து வரும் இந்தியாவுக்கு வலு சேர்க்கும். இந்தியா வல்லரசாக மாறி வருகிறது என தெரிவித்தார்.
வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். வாரிசு அரசியல், ஊழல் என திமுக தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது.திமுக ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. கொள்ளையடிப்பது மட்டுமே திமுக குடும்பத்தின் வேலை. மணல் கொள்ளை மூலம் ஒரு ஆண்டில் ரூ. 4,200 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
பள்ளிகளில் போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதை பிரிவு தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட போதை கடத்தல் மன்னன் திமுகவின் பாதுகாப்பிலும், அவர்கள் குடும்பத்தின் தொடர்பிலும் உள்ளார்.
தமிழ்நாட்டு மக்களை மொழி, சாதி, மதத்தின் பெயரில் திமுகவினர் பிரித்து ஆழ்ந்து வருகின்றனர். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரசும் திமுகவும் தான் காரணம். இதனால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை நான் மீட்டுள்ளேன்.
இந்து மதத்தின் பெண் சக்தியை அழிப்பேன் என்று காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி பேசி வதுகிறார். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுகவின்ர் எப்படி நடத்தினார்கள் என்று நமக்கு தெரியும். திமுகவினர் இன்றும் பெண்களை இழிவுபடுத்தி வருகின்றனர். திமுகவின் ஊழல் ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்டுவோம். நாங்கள் பெண்களுக்கான மரியாதையை மீட்டுக் கொடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் சிறப்பிக்க உங்களை நாள் அழைக்க வந்தேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தவன். குஜராத்தில் இருந்தும் பல குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. ஒரு குஜராத்தியாக, நான் உங்களை சௌராஷ்டிரா தமிழ் சங்கத்திற்கு அழைத்தேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.