நாடாளுமன்றத்தில் மிக மோசமான எம்பி ஆ. ராசா தான் – கொந்தளித்த அண்ணாமலை!
Jul 25, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் மிக மோசமான எம்பி ஆ. ராசா தான் – கொந்தளித்த அண்ணாமலை!

Web Desk by Web Desk
Apr 10, 2024, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது போதைப் பொருள் விற்பனையில் இருந்து வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில்  நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். இதில் கோவையில் அண்ணாமலையும், நீலகிரி தொகுதியில் எல்.முருகனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பிரதமர் மோடிக்கு தாமரை மாலை அணிவித்து பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது. கருணாநிதியின் மகள் கனிமொழி, தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி, முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கே.என். நேருவின் மகன் அருண் நேரு, பொன்முடியின் மகன் சிகாமணி… வாரிசுகள்தான் எம்பியாக இருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா?, ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.

திமுகவின் அப்பாக்கள் அமைச்சர்கள், மகன்கள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அவர்களுக்கு பிரச்சாரம் செய்வது முதல்வரின் மகன் உதயநிதி. 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா. அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார்.

திமுக கூட்டணி வைத்த காங்கிரஸ் அரசாங்கத்தாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதிலும் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற 543 எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது.

திமுக என்ற கூட்டத்திற்கு தலைவரான ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது பிடிக்கவில்லை. தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் மோடி. நாட்டில் செயல்படாத அரசுக்கு தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் என்றால் அது திமுக அரசுக்குதான் கொடுக்க வேண்டும்.

திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது போதைப் பொருள் விற்பனையில் இருந்து வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். நம் மீது உள்ள பாசத்தால் பிரதமர் மோடி வேடந்தாங்கல் பறவை போல் நம்மை பார்க்க வந்துள்ளார். கோபாலபுரத்தில் பெருச்சாளி போல் ஒளிந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்பது அவருடைய குடும்ப நலனிற்காகவா? அவருடைய சுயநலத்திற்காகவா? அவருடைய உற்றார் உறவினரின் நலனிற்காகவா? என்றால் இல்லை. மோடி இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. எனவே பிரதமர் மோடி பிரதமராக வர வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
ShareTweetSendShare
Previous Post

ஊழல், வாரிசு அரசியலை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் : மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை : உளவுத்துறை ஒப்புதல்! 

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies