ஊழல், வாரிசு அரசியலை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் : மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Aug 17, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல், வாரிசு அரசியலை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் : மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல், வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேசினார்.

அப்போது, கோயம்புத்தூரின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் மேட்டுப்பாளையத்திற்கு உண்டு என்றும், நீலகிரி தேயிலைக்கு பெயர் போன இடத்துக்கும், டீ விற்பவருக்கும் எப்படி தொடர்பு இல்லை என்று கூற முடியும்.

பல ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை கொடுத்தது காங்கிரஸ் கட்சியால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது.

பல தசாப்தங்களாக, காங்கிரஸ்-திமுக இண்டி கூட்டணி, எஸ்சி-எஸ்டி, ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை வீடு, குடிநீர், மின்சாரத்திற்காக ஏங்க வைத்தது. அவர்கள் ஆட்சியில் அனைவருக்கும் வீடு மற்றும் மின்சாரம் கிடைக்காது.

ஆனால் பாஜக அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமர் ஆவாஸை வழங்கியது. ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கொண்டு வந்தது. 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கியது. அவர்களில் பெரும்பாலோர் எஸ்சி-எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தமிழகம் முழுவதும் பாஜக அலை வீசுகிறது. திமுகவை தோற்கடிக்கும் ஆற்றல் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. திமுக எப்போதும் வெறுப்பு அரசியலை கடைபிடிக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் விழாவை இண்டி கூட்டணி எதிர்க்கிறது. தமிழகத்தில் ராமாயணம் தொடர்புடைய ஏராளமான கோயில்கள் உள்ளன. ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு முன் அந்த கோயில்களுக்கு நான் சென்றேன். ஆனால் திமுகவினருக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசி வருகின்றன.

ஊழலை அகற்றுவோம். ஊழல்வாதிகளை தண்டிப்போம். இது எங்களின் நிலைப்பாடு. ஆனால் இண்டி கூட்டணி தலைவர்கள் என்ன கூறுகிறார்கள். அவர்கள் ஊழலை ஆதரிக்கிறார்கள். ஊழல்வாதிகளை காப்பாற்ற ஒன்றுகூடியுள்ளனர். கச்சத்தீவு தீவை காங்கிரசும் திமுக தாரை வார்த்தது. அது தொடர்பான ஆவணங்களை நாங்கள் வெளியிட்டோம். அவர்களுக்கு தேர்தல் மூலம் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இந்தக் குடும்பக் கட்சிகள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களைத் தவிர, எந்த ஏழையும், பழங்குடியினரும் உயர் பதவியில் இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், பழங்குடியினப் பெண்ணை முதன்முறையாக பாஜக குடியரசுத் தலைவராக்கியது. அதற்கு இண்டி கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியாவின் பலத்தை இண்டி கூட்டணி நம்பவில்லை. கொரோனா தொற்றின் போது  இந்தியாவால் தடுப்பூசி தயாரிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். மேட் இன்  இந்தியா மூலம் தடுப்பூசியை உருவாக்குவோம் என்று கூறினோம்.இந்தியா தயாரித்தது  மட்டுமின்றி, இலவச தடுப்பூசிகளை உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளித்து  கோடிக்கணக்கான மக்களின் உயிரையும் காப்பாற்றியது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தது என்பதன்  அடிப்படையில் மாநிலங்கள் பாகுபாடு காட்டப்பட்டன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ‘சப்கா சத்’ திட்டத்தில் செயல்படுகிறது. அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். தமிழகத்தில் மனித ஆற்றலும் திறமையும் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்தால் நாடு வளர்ச்சி அடையும்.

திமுக ஆணவத்தில் உள்ளது. அண்ணாமலை யார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு திமுக தலைவர்கள் ஆணவத்தில் உள்ளனர். ஒரு இளைஞர், அதுவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்துள்ளார். காவல்துறை உயரதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். நேர்மையாக அரசியல் செய்து வருகிறார். களத்தில் வீரததை வெளிப்படுத்தி வரும் அவரை உங்களுக்கு தெரியவில்லையா?

இது ஊழலை இந்தியாவிட்டு வெளியேற்றும் தேர்தல் என்றும், வாரிசு அரசியலை வெளியேற்றும் தேர்தல் என்றும், போதை பொருள்களை வெளியேற்றும் தேர்தல் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: annamalaiMettupalayammodi campaginPM ModiNarendra ModiTamilNadu Bjp
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி இந்தியாவின் முகமாக மாறிவிட்டார்: அமெரிக்க எம்.பி.!

Next Post

நாடாளுமன்றத்தில் மிக மோசமான எம்பி ஆ. ராசா தான் – கொந்தளித்த அண்ணாமலை!

Related News

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies