2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க எம்பி பிராட் ஷெர்மன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, பிரதமர் மோடி இந்தியாவின் முகமாக மாறிவிட்டார். பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்திய – அமெரிக்க இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளன. பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இணைந்து இந்தியாவை வெற்றிகரமான நாடாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.
இந்தியா முதலீடு செய்வதற்கான சிறந்த இடம் மற்றும் வணிகம் செய்வதற்கான சிறந்த இடம் என்பது குறித்து பல தொழிலதிபர்களிடம் நான் பேசியுள்ளேன். சீனாவில் உற்பத்தி செய்பவர்கள், அது ஜனநாயகம் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சீனா சட்டத்தை நம்பக்கூடிய ஒரு நாடு அல்ல.
எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் நியாயமான மற்றும் நேர்மையான நீதிமன்ற அமைப்பை அணுகுவது மிகவும் முக்கியமானது. இதனை இந்தியா வழங்குகிறது என்று கூறினார்.