கோவையில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில், புதிய பாரதத்தின் சிற்பி டாக்டர் ஹெட்கேவாரின் அவதார நாளில் , அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
மூத்த வழக்கறிஞர் சேதுராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்,
மாதவ லஷ்மி மில்ஸ் அறங்காவலரும், சங்கரா கண் மருத்துவமனை உரிமையாளருமான எம். என். பத்மநாபன் மற்றும் பொள்ளாச்சி சாந்தி ஸ்கூல் செயலாளர் சாந்த குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்புரையாற்றிய ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க தென்பாரத தலைவர் டாக்டர். வன்னியராஜன், நூலைப் பற்றியும்,டாக்டர் ஜி காட்டிய தேசப் பாதை மற்றும் தேசநலன் குறித்தும் எடுத்துரைத்தார் .
அப்போது மேடையில் பேசிய தலைவர்கள், 1889-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி யுகாதி அன்று அவதரித்த பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஜி க்குப் என்று புகழாரம் சூட்டினார்கள்.
பாரதத்தின் வரலாற்று அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டு, வருங்கால திட்டங்களை வரையறை செய்ய வேண்டும் என அப்போது கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தேசநலன் குறித்த அக்கறை கொண்ட பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.