புனித ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகையையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.