தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 10:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் இன்று தண்ணீர்ப் பிரச்சினை அதிகரித்துள்ளது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால், கடுமையான வறட்சிக்கு கொங்கு பகுதி சென்று விடும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வீரியம்பாளையம், R.G.புதூர், சித்ரா நகர், நேரு நகர், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சேரன் மாநகர் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றி அண்ணாமலை,

வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருப்பது, நாடாளுமன்றத்துக்கான தேர்தல், நாட்டின் பிரதமர் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. அவரது கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியை இதற்கு முன்பிருந்த கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள்.

தமிழகத்தில் கடந்த 33 மாதங்களாக ஆட்சியில் இருக்கும் திமுகவோ, அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவோ எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல், தற்போது, நாட்டின் பிரதமருக்கான தேர்தலிலும், அதே பொய்யான பழைய வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றாத திட்டங்களை, இப்போது மட்டும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்.

இன்று கோவையில் தண்ணீர்ப் பிரச்சினை அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால், கடுமையான வறட்சிக்கு நமது கொங்கு பகுதி சென்று விடும்.

அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க, விவசாயம் மற்றும் தண்ணீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  கவனத்துக்குக் கொண்டு சென்று, நமக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதி, வறட்சியால் பாதிக்கப்படாமல் காப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.

தமிழகம் முழுவதும், நமது மக்கள், லஞ்ச ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள், ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இல்லாமல், முழுமையாக, மக்களுக்காக நிறைவேற்றப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பாரதப் பிரதமர் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்திட, நமது கோவை நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி பெற்றிட, மக்கள் இம்முறை தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
Share
Tweet
SendShare
Previous Post

ரமலான் பண்டிகை : இஸ்லாமியர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் தோல்வி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies