தயாநிதியின் பெயரிலிருந்து மாறனை நீக்கினால் அவருக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்காது எனப் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அண்ணாமலை,
நம் நாட்டில் உள்ள கேவலமான அரசியல் கட்சிகளில் ஒன்று திமுக. திமுக கட்சி அழுக்காறு மொழியின் அடிப்படையில் உருவானது. கடந்த 70 ஆண்டுகளாக நம் மாநிலத்தில் யாரும் செய்யாத முறைகேட்டை அவர்கள் அரசியல் சொற்களஞ்சியத்தில் கொண்டு வந்துள்ளனர். திமுக மிக மோசமான முறைகேட்டில் நிற்கிறது.
தயாநிதியின் பெயரிலிருந்து மாறனை நீக்கினால் அவருக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்காது. அவர் குடும்பத்தின் பெயரை நீக்கினால் முற்றிலும் பயனற்றவர்.
இதேப்போல் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் அரசியலில் இருப்பதற்கு குடும்பத்தின் பெயர் மட்டுமே காரணம் என தெரிவித்தார்.