ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இன்று உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ரமலான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
‘ஈதுல் பித்ர்’ என்று அழைக்கப்படும், ரமலான் பண்டிகை இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உதவும் பண்பையும், வித்தியாசமற்ற அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் நோக்கிலே உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.
30 நாட்கள் நோன்பு முடிந்து, ‘ஈகைத் திருநாள்’ பண்டிகையை முன்னிட்டு, இன்று உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தாவில் உள்ள சாலையில் இஸ்லாமிய மக்கள் ரமலான் தொழுகை நடத்தினர். பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இஸ்லாமிய மக்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
எகிப்தின் கெய்ரோவில் உள்ள மசூதிக்கு வெளியே தொழுகை நடந்தது. ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருக்கும் அல் அக்ஸா மசூதி வளாகத்தில் நடந்த தொழுகையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மசூதிகளில், நடைபெற்ற சிறப்பு தொழுகையில், ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.