கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரோஹன் குப்தா, இன்று பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அவர் தம்மை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோவில் விழா, குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு, ஆம் ஆத்மி கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் காங்கிரசின் நிலைப்பாட்டை விமர்சித்தார்.
சனாதள தர்மம் அவமதிக்கப்படும் போது அமைதியாக இருக்குமாறு கூறப்பட்டதாக தெரிவித்தார்.நாட்டின் பெயரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கூட்டணியில் தேச விரோத சக்திகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலிஸ் தானிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட கெஜ்ரிவாலை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மார்ச் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத் தலைவராக இருந்த ரோகன் குப்தாவை அகமதாபாத் கிழக்கு மக்களவை தொகுதி வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.
மார்ச் 18ஆம் தேதி தந்தையின் உடல்நலக் குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக கட்சிக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.