டெல்லி மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிறையில் உள்ள கவிதாவை சிபிஐ நேற்று கைது செய்த நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, பிஆர்எஸ் எம்எல்சி கவிதா உள்ளிட்டோர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திகார் சிறையில் உள்ள கவிதாவிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்வதாக அறிவித்தனர்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து கவிதா இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.