மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரசுக்கு மேலும் ஒரு பின்னடைவாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பாருல் சாஹு தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அக்கட்சியை சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில்,போபாலில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் முதல்வர் மோகன் யாதவ், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் முன்னிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பாருல் சாஹு பாஜகவில் இணைந்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் நரோட்டம் மிஸ்ரா சிந்த்வாரா மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் அமித் சக்சேனா, யாதவ் மகாசபாவின் மாநிலத் துணைத் தலைவர் ஷேர் சிங் யாதவ் உள்ளிட்டோரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜக தேசபக்தியை பின்பற்றுவதால் பல நல்லவர்கள் கட்சியில் இணைகிறார்கள்.
முன்னாள் எம்எல்ஏ பாருல் சாஹு, ஷேர் சிங் யாதவ் மற்றும் அமித் சக்சேனா ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ராமரை எதிர்க்க ஆரம்பித்தபோது அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பக்கம் கோவிலை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் மறுபக்கம் ‘துவா’ செய்கிறார்கள்.இந்த இரட்டை குணம் பலிக்காது. மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.