சைத்ரா நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 9, 2024 அன்று தொடங்கி, ஏப்ரல் 17, 2024 அன்று நிறைவடைகிறது.நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ‘சக்தி’ தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த பண்டிகை லூனி-சூரிய நாட்காட்டியின்படி இந்து புத்தாண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. மேலும் மகாராஷ்டிராவில் மக்கள் அதை குடி பட்வா என்றும், காஷ்மீரி இந்துக்கள் அதை நவ்ரே என்றும் கொண்டாடுகிறார்கள்.
இந்நிலையில், நவராத்திரியின் ஐந்தாம் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இந்த நவராத்திரி நாளில், பக்தர்கள் துர்கா தேவியின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியை வழிபடுகின்றனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரது ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.