காங்கிரஸ் எம்பி-க்காக வாக்கு கேட்டு சென்ற திமுக அமைச்சர் உள்ளிட்டவர்களை ஊருக்குள் வரக்கூடாது என பொது மக்கள் விரட்டியடித்தனர்.
விருதுநகர் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில், சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து திமுக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் வாக்கு கேட்டு செம்பட்டி NGO காலனிக்கு சென்றனர்.
அப்போது, மாணிக் தாக்கூர் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக, அமைச்சர்,எம்.பி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
ஒரு கட்டத்தில் ஊருக்குள் விடமாட்டோம் என விடாப்பிடியாக இருக்க, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் வாடிய முகத்துடன் திரும்பிச் சென்றார். திமுக வேட்பாளர், அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊருக்குள் விடாமல் விரட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது.