ஓய்வூதிய நிதி நிறுவனமான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிப்ரவரியில் சுமார் 8 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நிதி பாதுகாப்பை ஊழியருக்கு அளிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 15 லட்சத்து 50 ஆயிரம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்கள் எனவும், அவர்களில் 56 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதுடையவர்கள் எனவும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளன.