திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட நான்கு அடி உயர அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது.
சிறுவாபுரியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், அரசு அனுமதி இன்றி அங்கு சிலை வைக்கப்பட்டுள்ளதால், அந்த சிலையை உடனே அகற்ற வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், பொதுமக்களிடம் ஆரணி போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தெடர்ந்து, அம்பேத்கர் சிலையை பத்திரமாக அகற்றிய போலீசார், பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.