மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில், மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்ற நிலையில், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இந்த நிலையில், வன்முறை காரணமாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த 11 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.