நாட்டு மக்கள் பிரதமரை தேர்வு செய்யப் போகும் தேர்தல் இது, இந்திய மக்கள் தெளிவாக உள்ளனர் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார்.
கொல்லத்தில் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை
நாட்டு மக்கள் பிரதமரை தேர்வு செய்யப் போகும் தேர்தல் இது. இந்திய மக்கள் தெளிவாக உள்ளனர். 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியைப் பார்த்து உள்ளனர்.
அவர்கள் நிலைத்தன்மையை விரும்புகின்றனர். மோடி ஆட்சி தொடர விரும்புகின்றனர்.
‛இண்டி’ கூட்டணி கட்சிகள் அதிகாரப் பசியால் ஒன்று கூடி உள்ளனர்.
அவர்கள் பேராசை கொண்டவர்களாக உள்ளனர். தங்களது குழந்தைகளை காப்பாற்ற விரும்புகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் நாட்டின் அதிகாரத்தை எப்படி கொடுக்க முடியும். அவர்களால் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை.
இந்த முறை கேரள மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் பாஜகவின் ஓட்டு சதவீதம் அதிகரிக்க மக்கள் உதவியாக இருந்தனர். இந்த முறை இங்கிருந்து பாஜகவைச் சேர்ந்தவர் வெற்றி பெறும் அளவுக்கு கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உடன் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.