நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு - பாஜக வலியுறுத்தல்!
Aug 18, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு – பாஜக வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Apr 21, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திமுக நீக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக பாஜக, அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய, நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய தேர்தல் திருவிழாவின் முதல் கட்டம், ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் நடந்து முடிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் என்றாலும், உண்மையிலேயே தேர்தலை நடத்துவது மாநில அரசு அதிகாரிகள் தான். ஏனெனில் தேர்தல் ஆணையத்திற்கு என்று தனியாக கட்டமைப்பு இல்லை. இல்லை. அது உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறு குழு மட்டுமே.

தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்த்தல், இறுதிப்பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல்,  தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு என தேர்தலை நடத்தி முடிப்பது தமிழக அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் தான். மாவட்ட ஆட்சியர்கள் தான் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.

தமிழக அரசு அதிகாரிகள் குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் முழுக்க முழுக்க திமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். நியாயமாக நடக்கும் அதிகாரிகளை தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்கிறோம்  என்று திமுகவினர் அன்பாக மிரட்டியும் உள்ளனர்.

கோவை உள்ளிட்ட  தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர்களாக திமுக நியமித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நியாயமான வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் நடைபெற்ற குளறுபடியில் இருந்தே இதை நன்கு உணர முடிகிறது.

திமுகவினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜகவுக்கு வாக்களிக்க கூடிய வட இந்தியர்கள், மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நீலகிரி, முன்னாள் கவர்னர் தமிழிசை போட்டியிடும் தென் சென்னை,, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடும் திருப்பூர், பாஜக மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ் போட்டியிடும் வடசென்னை, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் போட்டியிடும் மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொகுதிக்கு தல ஒரு லட்சம் வாக்குகள் வீதம் நீக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

கோவையில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கியதாக அண்ணாமலை கூறியது உண்மையா.? நடந்தது என்ன.?மாவட்ட ஆட்சியர் விளக்கம்

திமுகவினரின் இந்த ஜனநாயகத்துக்கு விரோதமான திருட்டுத்தனத்தை, அயோக்கியத்தனத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு நாளன்றே அம்பலப்படுத்தி உள்ளார். எங்கெங்கெல்லாம் கொத்துக்கொத்தாக கடைசி நேரத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ, அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்தின் மீதும் மக்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தேர்தலை நேர்மையான முறையில் எதிர்கொள்வார்கள். ஆனால், மக்களின் மீது நம்பிக்கை அற்றவர்கள்தான் குறுக்கு வழியில் வெற்றி பெற நினைப்பார்கள். அதைத்தான் திமுக செய்திருக்கிறது. அதனால்தான் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ள தொகுதிகளில் கடைசி நேரத்தில் திருட்டுத்தனமாக, வாக்காளர்களை கொத்துக்கொத்தாக நீக்கி இருக்கிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற அராஜகம் நடப்பது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வேண்டுகோளின்படி எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: electionsre electionbjp
ShareTweetSendShare
Previous Post

 சாதி வெறியை அழித்து, ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் மோடி! – அமித்ஷா புகழாரம்

Next Post

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்! – நட்டா நம்பிக்கை!

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies