தேனியில் ஸ்ரீமத் ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் 62-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி 108 பெண்கள் பால் குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.
அல்லிநகரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீமத் ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலின் 62-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா, கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து நகர்வலம் புறப்பட்டார்.
பின்னர் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இருந்து 108 பெண்கள் பால்குடம் சுமந்து நலர்வலம் வந்து வழிபட்டனர்.