கேரள மாநிலம் வயநாட்டில், மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென மாவோயிஸ்ட்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26- ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கம்பமலை பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த 4 மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்களிப்பதில் எந்த பயணும் இல்லை என கூறி தேர்தலை புறக்கணிக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.