காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தேர்தல், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்பர் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாட்டின் அரசியலமைப்பை காங்கிரஸ் மாற்ற நினைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.