தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக தமிழக பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் போதை பொருள் அதிகளவில் கிடைப்பதால்தான், அழகர் ஆற்றில் இறங்கும் போது கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது என்றார்.
தமிழகத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்றால் பாஜக ஆட்சி அமையவேண்டும் என்றும், பாஜக தலைமை கட்டளையிட்டால் விக்கிரவாண்டி இடைதேர்தலில் தாம் போட்டியிட தயாராக உள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.