உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் படி உதகையிலிருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் 6 மணி முதல் இரவு 8 மணி வரை உதகை நகருக்குள் வருவதற்கு அனுமதி இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.