கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இன்ஸ்டாகிராம் காதலனை தேடி வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
புதுக்கடை அருகே 14 வயது சிறுமி ஒருவர், கோடைகால விடுமுறையையொட்டி கணினி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது சகோதரருடன் தேங்காய்பட்டணம் கடற்கரைக்கு இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்கச் சென்றுள்ளார்.
அவர்களுடன் வீட்டின் அருகே வசிக்கும் மேலும் இரண்டு சிறுமிகளும் சென்றுள்ளனர். அப்போது கடற்கரைக்கு வந்த இளைஞர் சிறுமியை காதலிக்கவில்லை என கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த சிறுமி உட்பட நால்வரும் அங்கிருந்து ரயிலில் கிளம்பி திருவனந்தபுரத்துக்கு சென்றுள்ளனர். பின்னர் அடுத்து எங்கே செல்வது என தெரியாமல் திகைத்து நின்றிருந்த நால்வரையும் கேரள ரயில்வே போலீசார் மீட்டனர்.
அதன்பிறகு நால்வரும் புதுக்கடை காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.