மறைந்த ஐ.ஏ.எஸ் பி.எஸ்.ராகவன் பல்வேறு தருணங்களில் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடியவர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில், மறைந்த ஐ.ஏ.எஸ் பி.எஸ்.ராகவனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன்,
மறைந்த பி.எஸ். ராகவன் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டவர் எனவும், பல்வேறு தருணங்களில் துணிச்சலாக முடிவு எடுக்கக் கூடியவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
மேலும், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு காலகட்டங்களில் தன்னிடம் பல கருத்துக்களை எடுத்துரைத்தார் எனவும் தெரிவித்தார்.
அவரது இறப்பு மிகப்பெரிய பேரிழப்பு எனவும் , 60 ஆண்டுகாலம் இந்தியாவின் கருவூலமாக இருந்தார் தனித்து நிற்காமல் அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்து இயங்கக்கூடிய மனிதனாக இருந்தார் எனத் தெரிவித்தார்.