மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்’ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டி உள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் ஹமிர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனுராக் தாக்கூர் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,
உங்கள் குழந்தைகளின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு கொடுக்கவும், நாடுகளின் அணு ஆயுதங்களை அழிக்க போவதாகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
நீங்கள் காங்கிரஸ் அரசு வேண்டுமா? அல்லது நம்பிக்கையுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் வெடிகுண்டு வெடிப்பது சாதாரணமாகிவிட்டன. மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்என்ன மாதிரியான அரசு இது? மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது எனக் குற்றம்சாட்டினார்.