நாடாளுமன்ற 2-ஆம் கட்ட தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகாவில் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல்கட்டமாக பெங்களூரு, மைசூரு உள்பட 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், 2-வது கட்டமாக வரும் 7-ஆம் தேதி பெலகாவி, பல்லாரி, உத்தரகன்னடா, உள்பட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று காலை 11 மணியளவில் பெலகாவி மாலினி சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து தேர்தல் காணும் நகரங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.