சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென பேசிய திமுகவுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்துள்ளதாகவும், பால் தாக்கரே உயிரோடிருந்தால் இதனைக் கண்டு வருத்தப்பட்டிருப்பார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு, கோலாப்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மஹராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் தலைமையில் உள்ள சிவசேனா போலி சிவசேனா என குறிப்பிட்டார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க.,வுடன் அவர்கள் கூட்டணி வைத்துள்ளதாகவும், அவ்வாறு பேசியதற்காக திமுக தலைவர்களை மும்பைக்கு வரவழைத்து பாராட்டியதாகவும், பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார்.
பால் தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் சிவசேனாவின் தற்போதைய நிலையைக் கண்டு வருத்தப்படுவார் என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார்.