உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மண்ணடி பகுதியில் இருந்து பேரணியாக சென்ற, இக்கட்சியினர் தேர்தல் ஆணயத்தை முற்றுகையிட இருந்தனர். இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய அனுமதி வாங்காமால் பேரணி, போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.