வெடிகுண்டு தயாரிக்க சென்னையில் பொருள்கள் வாங்கியதாக ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் கைதான இரு தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், 10 பேர் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த முசசீர் உசேன் சாஜிப், அப்துல் மதீன் தாகா ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்களை சென்னை அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்புக்கு தேவையான டைமர், பேட்டரி உள்ளிட்ட உதிரிபாகங்களை சென்னையில் உள்ள கடைகளில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த பொருள்களை டிபன் பாக்சில் வைத்து பிப்ரவரி 29ஆம் தேதி பெங்களூருவுக்கு எடுத்து சென்றதாகவும், பின்னர் மார்ச் ஒன்றாம் தேதி குண்டை வெடிக்க செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.