ராமநாதபுரம் அருகே, அரசு பேருந்தில் தவறவிடப்பட்ட 15 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாம்பனில் இருந்து உச்சிப்புளிக்கு பயணம் செய்த ரெஜினா பேகம் என்ற பெண், தனது கைப்பையை பேருந்திலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கினார்.
அதனுள்ளே 15 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது. பையைத் தவற விட்டது அறிந்ததும், ரெஜினாவின் தம்பி ராமநாதபுரம் பேருந்து நிலையம் வந்து விசாரித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துனருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து பணம் மற்றும் நகைகளை பத்திரமாக ஒப்படைத்தார்.