உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் ஒருவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
புதுச்சேரியை சேர்ந்த 26 வயதே ஆன ஹேமச்சந்திரனுக்கு, அண்மையில் உடல் எடையை குறைப்பதற்காக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கொள்ளப்பட்டது. அவருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பதினைந்தே நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தவறான சிகிச்சை காரணமாக ஹேமச்சந்திரன் இறந்துவிட்டதாகவும், மருத்துவர், மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த இளைஞர் ஹேமசந்திரனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், இது குறித்து தமிழக அரசிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
உடல் பருமன் அறுவை சிகிச்சையின் விளைவுகள் பேசு பொருளாகியுள்ள நிலையில், இதுபோன்ற உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகளை யார் மேற்கொள்ளலாம்? அறுவை சிகிச்சைக்கு முன்னால் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்பூர்த்தியிடம் கேட்டோம்.
ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் நெஞ்சு வலி ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விளக்கினார் மருத்துவர் சாந்தி.
யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பார்த்து இது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும், உடல் எடை குறித்த பிறரின் கேலி பேச்சுக்கு செவிமடுக்க வேண்டிய தேவையில்லை என்று கூறுகிறார் மனநல மருத்துவர் அபிலாஷா.
இது போன்ற அறுவை சிகிச்சைக்கு சட்டங்களில் அனுமதி இருந்தாலும் முறையான மருத்துவரின் மேற்பார்வைக்கு பிறகே இது போன்ற அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்றும், முடிந்த அளவிற்கு இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர்.