வேலூரில் டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர், பெருமுகை பகுதியில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார்.
ஏரியூர் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில், அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த இளைஞர்கள், சந்துருவின் டாஸ்மாக் பாருக்குத் தீ வைத்தனர். இதில் தொடர்புடைய நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.