கடந்த 30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையற்ற அரசாங்கங்கள் ஆட்சி புரிந்ததால் நாடு பல்வேறு இழப்புகளை சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா,
இண்டி கூட்டணியில் ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார்.
ஒரு ஆண்டு சரத்பவார், அடுத்த ஆண்டு மம்தா பானர்ஜி, பின்னர் ராகுல் காந்தி என பிரதமர்கள் தேர்வு செய்யப்படலாம் என அவர் கூறினார்.
இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையற்ற அரசாங்கங்கள் ஆட்சி புரிந்ததால் நாடு பல்வேறு இழப்புகளை சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் நாடு வலுவான தலைமையைப் பெற்றுள்ளது என்றும், அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல, கொள்கைகளிலும் ஸ்திரத்தன்மை பெற்றுள்ளதாகதெரிவித்தார்.