முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானல் சென்ற நிலையில், தேனி மாவட்ட எல்லையில் 2 மணி நேரம் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் பயணமாக கொடைக்கானலை சென்றடைந்தார்.
இதனையடுத்து அவரது பாதுகாப்பு கருதி, தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால் கால தாமதத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.