திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே அரசே பள்ளியை கையகப்படுத்தி நடத்திடக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் பெற்றோருடன், மாணவர்கள் மனு அளித்தனர்.
வெங்கட்ராயபுரத்தில் மரியா கிரேஸ் ரூரல் எஜூகேசன் சொசைட்டி நிறுவனம் மூலம், கடந்த 1990-ம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போதிய நிதி இல்லாததன் காரணமாக, இப்பள்ளியானது வரும் கல்வியாண்டு முதல் செயல்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து அரசே பள்ளியை ஏற்று நடத்தக்கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் பெற்றோருடன், மாணவர்கள் மனு அளித்தனர்.