ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 48 மணி நேரமாகத் தொடர்ந்து பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக பெடார் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 10-ற்கும் மேற்பட்ட வீடுகளும், சாலைகளும் சேதமடைந்தன.
சாலைகள் சேதமடைந்துள்ளதால் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.