நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிவதால் வனவிலங்குகள் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில், சீகூர் முதல் பெள்ளிக்கள் வரை உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
நூறு ஏக்கருக்கும் மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க, 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முயன்று வருகின்றனர்.
காட்டுத் தீயில் சிக்கி பல அரியவகை தாவரங்கள் கருகிய நிலையில், வனவிலங்குகள் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.