டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், குரூப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாட உள்ள நிலையில் இந்திய அணி சார்பில் கிரிக்கெட் தொடருக்கான போட்டியாளர்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
மேலும் அறிவித்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் வரும் மே-25ம் தேதி வraiகால அவகாசம் வழங்குவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.