புதுச்சேரியில் மேய்ச்சலுக்கு சென்ற மூன்று பசு மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.
கிருமாம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கு சொந்தமான ஐந்து பசு மாடுகளும், அவரது நண்பர் தண்டபாணிக்கு சொந்தமான ஒரு மாடும் வெள்ளகுளம் பகுதியை சுற்றி உள்ள கரம்பு நிலத்தில் மேய்சலுக்கு சென்றுள்ளன.
இந்நிலையில்,மேய்ச்சலுக்கு சென்ற 6 மாடுகளில், 3 மாடுகள் மட்டும் வீடு திரும்பியதால், மற்ற மாடுகளை தேடி சென்ற போது, காலி இடத்தில் மர்மமான முறையில் மாடுகள் இறந்து கிடந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.