கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நோயாளிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்றும், தடுப்பூசிகள் உட்பட அனைத்து மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு தெளிவான தரநிலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.