நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள் மண்டல வனப்பகுதிகளில் அதிநவீன தொலைநோக்கி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை கொண்டு பருவ மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உள் மண்டல வனச்சரகங்களான தெப்பக்காடு, கார்க்குடி, மசினகுடி, முதுமலை மற்றும் நெலாலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 2024-ம் ஆண்டிற்கான பருவமழைக்கு முன் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கி வருகிற ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது.
வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் குழுக்களாக பிரிந்து, தாவர உண்ணி, ஊனுண்ணி வாழ்விடங்கள், மாமிச உண்ணிகளின் அடையாள அளவை காணல், வனவிலங்குகளின் வாழ்விட மதிப்பீடு, தாவரங்கள் கணக்கெடுத்தல் உள்ளிட்டவைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக வனவிலங்குகளை நேரடியாக மற்றும் மறைமுகமாக பார்த்தல், எச்சம், தரைக்கீறல், மரக்கீறல்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.