திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில், கோஷ்டி மோதலில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் நகர மற்றும் ஒன்றிய அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
அப்போது, அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள், அவரது காரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திமுக முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக நகரச் செயலாளர் புகைப்படம் எடுத்து கொண்டதை கண்டித்து, முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அதிமுகவினிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.