சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா்.
சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது எனவும் இத்தகைய ஸ்டிக்கர்களால் சிலர், அரசியல் கட்சியிகளை தவறாக பயன்படுகின்றனர் உள்ளிட்ட காரணங்களால் ஸ்டிக்கர்களை நீக்குவதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்தது.
இதையடுத்து இன்று முதல் ஸ்டிக்கர்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசாா் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.
இதற்கிடையே ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் PRESS / MEDIA என்ற ஸ்டிக்கர்களை வாகனத்தில் ஒட்டிக் கொள்ளலாம் என சென்னை மாநகர காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.