இந்தியாவின் மத சுதந்திர சூழல் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்த இந்தாண்டிற்கான அறிக்கையை, அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் USCIRF எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா உள்பட 11 நாடுகளும் மத சுதந்திரத்தின் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. 5வது நாடாக இந்தியா இடம்பெற்று இருந்தது தான் பேசுபொருள் ஆனது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தலையிடுவதாக வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.