ஒடிசா மாநிலம் பிரம்மபூர், நவ்ரங்பூர் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது. வரும் 13-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஒடிசாவில் பாஜக, பிஜூ ஜனதா தளம், காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், பிரம்மபூர் மற்றும் நவ்ரங்பூரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பேரணியில் பங்கேற்கவுள்ளார். இதற்காக பிரதம்ர மோடி நேற்று இரவு புவனேஸ்வர் வந்தடைந்தார்.
ஒடிசா பாஜக தலைவர் மன்மோகன் சமல், புவனேஸ்வர் எம்பி அபராஜித சாரங்கி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்திற்கு முன்னதாக, புவனேஸ்வரிலுள்ள லிங்கராஜர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.