ராமநாதபுரத்தில் நிலத்தை அளவிட்டு பட்டா உட்பிரிவு செய்ய லஞ்சம் வாங்கிய நில அளவைத்துறை பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு என்பவர், தனது மனைவிக்கு சொந்தமான சுமார் 9 செண்ட் நிலத்துக்கு பட்டா உட்பிரிவு செய்வதற்காக, ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தை பலமுறை நாடியுள்ளார்.
அப்போது பட்டா உட்பிரிவு செய்ய 3 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வழங்குமாறு, நில அளவைத்துறை பொறியாளர் சிவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவாவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.