பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!
Sep 20, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டத்தை வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் குடியரசாக மாறியதிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதற்காக முன்னாள் அதிபர் தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை. அது பற்றிய செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

2022-ல் நடந்த பிரேசில் தேர்தலில் அதிபர் போல்சனாரோ, அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடுகள் தான் தமது தோல்விக்குக் காரணம் என்று போல்சனாரோ குற்றஞ்சாட்டியிருந்தார். ராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகளின் ஆதரவைப் பெற முடியாததால், தேர்தல் முடிவுகளை ராணுவ முன்னாள் கேப்டனான போல்சனாரோவால் மாற்றமுடியவில்லை.

ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு அதிபராவோம் என்று லூலா கூட நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். 2023ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அதிபராக லுாலா டா சில்வா பதவியேற்றார்.

பதவியேற்கும் போதே தனது அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது என்றும், அதே நேரம் தவறு செய்தவர்கள் நீதிக்குப் பதிலளிப்பார்கள் என்றும் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்திருந்தார்.

அடுத்த 8வது நாளில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் தலைநகரில் அரசு அலுவலகங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்ததாகவும் போல்சனாரோ மீது குற்றம் சாட்ட பட்டது.

பிரேசிலின் வாக்களிப்பு முறையே மோசடியானது என்று பொய்யாகக் கூறியதற்காகப் போல்சனாரோ 2030 வரை எந்தப் பொதுப் பதவிக்கும் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லுலா டா சில்வா தலைமையில் ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில் சதி திட்டம் தீட்டியதாகவும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாகவும் போல்சனாரோ மீது குற்றம் சாட்டபட்டது.

அர்ஜென்டினாவுக்குத் தப்பியோட முயன்றதாகவும், தனது மகன் எட்வர்டோவுடன் சேர்ந்து நீதிமன்ற விசாரணையில் தலையிட முயன்றதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தந்தையும், மகனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வு போல்சனாரோவை குற்றவாளி என்று அறிவித்துள்ளது. அவருக்கு 27 ஆண்டுகள் 3 மாத சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் போல்சனாரோவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர். வாக்காளர்களின் விருப்பத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு, அரசியலமைப்புக்கு எதிரான வழிகளில் தன்னைத் அதிபராக நிலைநிறுத்த போல்சனாரோ தீவிரமாகச் சதி செய்ததாக நீதிபதிகள் உறுதி படுத்தியுள்ளனர்.

ஜனநாயகச் சட்டத்தின் ஆட்சியை ஒழிக்க முயற்சித்தது, ஆட்சிக் கவிழ்க்க முயற்சி செய்தது, பொது சொத்துக்களை அடுத்து நொறுக்குதல்,பாதுகாக்கப்பட்ட தேசிய பாரம்பரிய இடங்களுக்குச் சேதம் விளைவித்தல், ஆகிய குற்ற சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, அதிபர் வேட்பாளர் லூலாவையும் அவரது துணை அதிபர் வேட்பாளர் ஜெரால்டோ அல்க்மினையும் படுகொலைச் செய்யவும், தன் மீதான விசாரணையை மேற்பார்வையிட்டு வரும் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸைக் கைது செய்து தூக்கிலிடவும் திட்டமிட்டிருந்த ஒரு சதித்திட்டம் குறித்தும் தங்களுக்குத் தெரியும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐந்து நீதிபதிகளில் இரண்டு பேர் போல்சனாரோவைக் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்து இருந்தால் மட்டுமே மேல்முறையீட்டுக்குச் செல்ல முடியும். எனவே, வயதைக் காரணம் காட்டி வீட்டுக்காவலிலேயே சிறைத் தண்டனையை அனுபவிக்க கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே போல்சனாரோ சிறந்த மனிதர் என்று கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், இந்தத் தீர்ப்பு தன்னை வருத்தமடைய வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளியான பிரேசிலின் உச்ச நீதிமன்ற நீதிபதியும் மற்றும் பிற நீதிபதிகளும் முன்னாள் அதிபர்  போல்சனாரோவை சிறையில் அடைக்க அநியாயமாகத் தீர்ப்பளித்துள்ளனர் என்றும், பிரேசிலில் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைள் தொடர்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இந்தத் தீர்ப்பை கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், பிரேசிலின் இந்தச் சூனிய வேட்டைக்கு, அதற்கேற்ப அமெரிக்கா பதிலளிக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் ட்ரம்ப், பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: Former Brazilian president sentenced to 27 years in prison - US President Trump condemnsபிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனைஅதிபர் ட்ரம்ப் கண்டனம்
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

Next Post

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies