திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை சரிந்து காணப்படுகிறது திண்டுக்கல் மலர் சந்தைக்கு சின்னாளப்பட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ மல்லிகைப் பூ விலை குறைந்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல முல்லைப்பூ 120 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ 350 ரூபாய்க்கும், செவ்வந்திப்பூ 200 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.